Published : 10,Mar 2020 08:10 AM

ம.பி.யில் 19 காங்., எம்எல்ஏக்கள் ராஜினாமா: காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது?

19-congress-Mlas-resigned-in-Madhya-pradesh

மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கிய நிலையில், இன்று
திடீரென பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் விலகினார்.

image

வீடு புகுந்து நகைகளை திருடிய கொள்ளையர்கள்.. சத்தம் கேட்டு உஷாரான கிராமம்..! 

இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய 
பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பதவி விலகிய 19 பேரில் 6 பேர் ம.பி அமைச்சர்கள் ஆவார்கள்.

image

ஆர்யாவும் கரடி பொம்மையும் - வெளியானது டெடி டீசர் 

மத்தியப் பிரதேசத்தில் 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால், சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 121-லிருந்து 102 ஆக குறைகிறது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்எல்ஏக்கள் பலம் தேவை என்னும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லை எனத் தெரிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் பாஜகவில் 107 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் அக்கட்சி ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்