[X] Close

ஆர்யாவும் கரடி பொம்மையும் - வெளியானது டெடி டீசர்

சினிமா

Arya-s-teddy-movie-teaser-released

ஆர்யா நடித்துள்ள டெடி படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது

ஆர்யா நாயகனாக நடித்துள்ள திரைப்படம் டெடி. இப்படத்தை சக்தி செளந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இந்தப்படத்தில் நாயகன் ஆர்யாவுடன் டெடி பியர் பொம்மை ஒன்று பயணிப்பதுபோல தெரிகிறது.

image


Advertisement

இந்தப் படத்தில் சாயிஷா, சதீஷ், கருணாகரன், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஆர்யாவின் அதிரடி, அவருடன் பயணிக்கும் டெடி பியர் பொம்மை என டெடி டீசர் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

image

இந்தப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமல்லாது குழந்தைகளை கவரும் கதைக்களமும் இருப்பதால் வரும் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இணையத்தில் வெளியாகியுள்ள டெடி டீசரை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close