Published : 09,Mar 2020 02:11 PM

கோயில் வாசலில் தூங்கியவர் தலையில் கல்லைப் போட்டு கொலை - மர்ம நபருக்கு வலைவீச்சு

A-Man-murdered-by-unknown-man-in-Puducherry-temple

புதுச்சேரி அருகே கூலித் தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மர்ம நபரை சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியை அடுத்த மண்னாதீஸ்வரர் கோயில் அருகே இன்று காலை சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யபட்ட நிலையில் கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கடலூர், வன்னியர்பாளைம் பகுதியை சேர்ந்த டேனியல் (52) என்ற கூலித் தொழிலாளி என்பது தெரியவந்தது. அவருக்கு குடிப்பழக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொலை நடைபெற்ற கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி விடியே காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

image

அந்த காட்சிகளில் கோயில் வாயிலில் தூங்கிக்கொண்டு இருந்த டேனியலை, சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் எழுப்பி வாக்குவாத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் டேனியல் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். தற்போது அந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

“சோத்துக்கே வழியில்லாம இருக்கோம்யா.,” விவசாயிகளின் வலியை சொல்லும் பூமி டீசர்..!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்