கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள் - இவையெல்லாம்தான் காரணமா?

கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள் - இவையெல்லாம்தான் காரணமா?
கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள் - இவையெல்லாம்தான் காரணமா?

கச்சா எண்ணெய் விலை சரிவின் எதிரொலியால் இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

இந்திய பங்கு சந்தைகள் இன்று ஒரே நாளில் கடும் சரிவை சந்தித்திருகின்றன. மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை ஆகிய இரண்டும் வீழ்ச்சியடைந்துள்ளன. மும்பை பங்கு சந்தை மதிப்பீடான சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 1,942 புள்ளிகள் சரிந்து 35,635 புள்ளிகளுடன் நிறைவடைந்துள்ளன. இது ஒரே நாளில் 5% வீழ்ச்சி ஆகும்.

சென்செக்ஸ் மதிப்பீட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிகபட்சமாக 14% வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் பங்கு மதிப்புகள் 52 வாரங்களில் காண வேண்டிய வீழ்ச்சியான ரூ.1,094.95 சரிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையின் பெரும் பங்கு தாரரின் கடும் வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, டி.சி.எஸ் நிறுவனம், இன்ஃபோசிஸ் ஆகியவை பங்கு சந்தையில் முன்னேற்றம் கண்டுள்ளன.

தேசிய பங்கு சந்தை மதிப்பீடான நிஃப்டி 538 புள்ளிகள் அல்லது 5% சரிந்து 10,451 புள்ளிகளுடன் முடிவடைந்தது. தேசிய பங்கு சந்தையின் அனைத்து நிறுவனங்களுமே சிவப்பு நிற வீழ்ச்சிக் குறியீடுடன் நிறைவு பெற்றன. உலோக நிறுவனங்களின் பங்குகள் அதிகபட்சமாக 8% வீழ்ச்சியடைந்தன. அத்துடன் ஊடகங்களின் பங்குகள் 6.5% சரிவை சந்தித்தன. சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 30 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் எதிரொலியே பங்கு சந்தைகள் வீழ்ச்சிக்கு காரணம் என கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலி சர்வதேச பங்குச் சந்தைகளை பாதித்துள்ளது. சர்வதேச அளவில் மட்டுமின்றி இந்திய பங்கு சந்தைகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா வைராஸ் பாதிப்பு காரணமாக நிஃப்டியில் 9% பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். அத்துடன் இரண்டு நாட்கள் விடுமுறையில் யெஸ் வங்கி மீது ஏற்பட்ட நெருக்கடிகளும் இன்று பங்கு சந்தைகளில் எதிரொலித்ததாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி வெளிநாட்டினை சேர்ந்த முதலீட்டாளர்கள் தங்கள் ரூ.3,594.84 கோடி மதிப்பு பங்குகளை விற்பனை செய்திருப்பதாகவும், அதனை தேசிய முதலீட்டாளர்கள் ரூ.2,543.78 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், இதுவும் பங்கு சந்தைகளில் எதிரொலித்ததாகவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com