"அடடா என்னவொரு கண்கொள்ளா காட்சி"- சிஎஸ்கே பதிவிட்ட புகைப்படம் !

"அடடா என்னவொரு கண்கொள்ளா காட்சி"- சிஎஸ்கே பதிவிட்ட புகைப்படம் !
"அடடா என்னவொரு கண்கொள்ளா காட்சி"- சிஎஸ்கே பதிவிட்ட புகைப்படம் !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே சிஎஸ்கே நிர்வாகம் தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தினமும் பயிற்சியில் ஈடுபடும் வீரர்களின் புகைப்படங்களையும் வீடியோவையும் பகிர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு பிரமாதமான புகைப்படத்தை சிஎஸ்கே பகிர்ந்துள்ளது. அந்தப் புகைப்படத்தில் சின்ன தல சுரேஷ் ரெய்னா "லாங் ஆன்" திசையில் பந்தை சிக்ஸருக்கு அடிக்க, ஸ்டம்புக்கு பின்னாடி கேப்டன் தோனி கீப்பிங் செய்கிறார். இதனை பகிர்ந்த சிஎஸ்கே அந்தப் புகைப்படத்தை "கண்கொள்ளா காட்சி" என பெயரிட்டு பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 29-ஆம் தேதி தொடங்குகின்றன. மும்பையில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டுமே நீண்ட வருட ஐபிஎல் பகை கொண்ட அணிகள் என்பதால், முதல் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரண்டு அணிகளின் ஆட்டத்தை விட, அவற்றின் ரசிகர்கள் போடும் ஆட்டமே இன்னும் ஆரவாரமாக இருக்கும். இதனால் ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவே இரண்டு அணியின் வீரர்களும் தீவிர பயிற்சியில் உள்ளனர்.

ஒருபுறம் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா இருக்கிறார். இவர் இந்திய அணியின் தற்போதைய தொடக்க வீரர். பேட்டிங்கில் மரண ஃபார்மில் இருக்கிறார். மறுபுறம் சென்னை அணியின் கேப்டன் தோனி. இவர் உலகக் கோப்பை போட்டிக்குப் பின்னர் இன்னும் ஒரு கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடவில்லை. ராணுவம், விவசாயம் என பிசியாக இருந்துவிட்டார். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்காக மார்ச் 1-ஆம் தேதி சென்னை வந்த தோனியும், சிஎஸ்கே வீரர்களும் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com