காவல்நிலையத்தைக் கொளுத்துங்கள்... போராட்டத்தில் கொந்தளித்த எம்எல்ஏ

காவல்நிலையத்தைக் கொளுத்துங்கள்... போராட்டத்தில் கொந்தளித்த எம்எல்ஏ
காவல்நிலையத்தைக் கொளுத்துங்கள்... போராட்டத்தில் கொந்தளித்த எம்எல்ஏ

காவல்நிலையத்தைக் கொளுத்துங்கள் என்று மத்தியப்பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கூக்குரலிடுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 

பாஜக செய்தித் தொடர்பாளர் தஜிந்தர்பல் சிங் பக்கா என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஷிவ்புரி மாவட்டத்தின் கரேரா தொகுதி எம்எல்ஏவான சகுந்தலா கடிக் என்பவர் காவல் நிலையத்தைக் கொளுத்துங்கள் என்று போராட்டக்காரர்களை வலியுறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மத்தியப்பிரதேசத்தின் மந்த்சவுர் பகுதியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து சகுந்தலா தலைமையில் நடந்த போராட்டத்தில் முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌகானின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. அப்போது தீ வைக்கப்பட்ட உருவபொம்மை மீது போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீயை அணைத்ததால் ஆத்திரமடைந்த சகுந்தலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com