மெல்பர்ன் நகரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது.
உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இன்னும் சற்றுநேரத்தில் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
பயமுறுத்தும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வரலாறு !
டாஸ் இழந்த பின்பு பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீதி கவுர் "நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனாலும் பரவாயில்லை, நாங்கள் நிச்சயமாக ரன்களை சேஸ் செய்வோம். சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியன் ரன்களை கட்டுப்படுத்துவோம். இறுதிப் போட்டியில் வெல்வதற்கு நிச்சயமாக போராடுவோம். இந்தப் போட்டியை காண்பதற்கு என்னுடைய அம்மா இங்குதான் எங்கேயோ இருக்கிறார் என்பது எனக்கு தெரியும்" என்றார்.
இந்திய கிரிக்கெட்டின் "சிங்கப் பெண்கள்"
டி-20 போட்டிகளில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி அதிகப்பட்சமாக 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, அதேநேரம் இந்திய அணி வெறும் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆனால் டி20 உலகக் கோப்பை தொடர்களில் இரு அணிகளும் சரிசமமான பலம் வாய்ந்த அணிகளாகவே திகழ்கின்றன. டி20 உலகக் கோப்பைகளில் 4 போட்டியில் இரண்டு அணிகளுமே தலா இரண்டு வெற்றி, தோல்விகளை பதிவு செய்துள்ளன. இதில் 2018 மற்றும் நடப்பு 2020 டி20 உலகக்கோப்பை இரண்டிலுமே ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வெற்றி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!