கேரளாவில் மேலும் 5 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 97 நாடுகளுக்கு பரவியியுள்ளது. தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 80 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 55 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 5 ஆயிரம் பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சீனாவில் 80 ஆயிரம் பேருக்கும், பிற நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவுக்கு அடுத்தப்படியாக தென் கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா.
இந்தியாவில் மொத்தம் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிகிச்சை பெற்று வரும் நிலையில் கேரளாவில் மேலும் 5 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, இத்தாலியில் இருந்து திரும்பிய 3 பேருக்கும், கேரளாவில் உள்ள இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது
தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றால் நான் இறந்துவிட வேண்டுமா"? - தெலங்கானா முதல்வர் காட்டம்
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!