[X] Close

''என் வாழ்வின் முக்கியமான 5 பெண்கள்'' - சச்சின் வெளியிட்ட வீடியோ

விளையாட்டு

Sachin-Tendulkar-shares-video-of-WomensDay-special

தன் வாழ்வின் முக்கியமான 5 பெண்கள் குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மனிதக் குலத்தை செம்மையடைய செய்யும் பெண்களை போற்றும் விதமாக உலகம் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மகளிர் தினத்திற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆண்கள் தங்கள் வாழ்வில் முக்கிய பங்காற்றும் பெண்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

image

இந்நிலையில் மகளிர் தினமான இன்றைய தினத்தில், தன் வாழ்வின் முக்கியமான 5 பெண்கள் குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ''என் வாழ்க்கையில் 5 பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். என்னுடைய அம்மா, என்னுடைய அத்தை, என்னுடைய மனைவி அஞ்சலி, மனைவியின் தாயார், என்னுடைய மகள் சாரா'' என ஐந்து பேரை சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ''எல்லா அம்மாக்களைப் போலவும் என்னுடைய ஆரோக்கியத்திற்கும், உடல்நலத்திற்கும் என் அம்மாவே காரணம்'' என அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவருடைய அத்தை, மனைவி, மகள் என ஒவ்வொருவரையும் குறித்து தன் நினைவுகளையும், தன் எண்ணங்களையும் வீடியோவில் சச்சின் பகிர்ந்துகொண்டுள்ளார்.


Advertisement

image
சச்சின் வெளியிட்ட இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் பகிர்ந்து மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close