[X] Close

''இதுதான் தாய்ப்பாசம்'': காட்டுயானையை ஓடஓட துரத்தும் எருமைக் கன்றுக்குட்டி - வீடியோ!

உலகம்

Viral-video-of-Baby-Buffalo-Charges-At-Elephant
தன் தாயிடம் வம்பு செய்யும் காட்டு யானையை ஓட ஓட துரத்தும் எருமை கன்றுகுட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதான் இயற்கை என பலரும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டு வருகின்றனர்.
 
இளங்கன்று பயமறியாது என்பார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தன் தாயின் மீதான பாசத்தால் ஒரு எருமை கன்றுக்குட்டி தற்போது லிட்டில் ஹீரோவாகியுள்ளது. ட்விட்டரில் 'Nature is Lit' என்ற பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அந்த வீடியோவில் ஒரு பெரிய காட்டுயானை ஒன்று எருமை ஒன்றுடன் வம்பு செய்து கொண்டிருக்கிறது. 
 
image
 
அப்போது எருமையுடன் நின்ற அதன் குட்டி தன்னைவிட பல மடங்கு பெரிய காட்டுயானையை கண்டு பயப்படாமல் யானையை துரத்திக் கொண்டு ஓடுகிறது. மிகச்சிறிய உருவம் ஒன்று தன்னை துரத்தியதைக் கண்டு யானையும் விலகிவிலகி ஓடுகிறது. தாய் எருமை தன் குட்டிக்கும் பின்னால் ஓடுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 
 
தன் தாய்க்காக பெரிய யானையைக் கூட விரட்டும் எருமைக் கன்றுகுட்டி இணையவாசிகளிடம் லிட்டில் ஹீரோவாகியுள்ளது. துரத்துவது ஒரு குழந்தை என்று தெரிந்து விலகி விலகி ஓடும் யானையும் ஹீரோவாகியுள்ளது. மேலும், இதுதான் இயற்கை என்றும், விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close