[X] Close

சூர்யாவுக்காக அனிருத் போட்ட 8 !

Anirudh-has-composed-8-songs-for-Surya


 சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம், ‘தானா சேர்ந்த கூட்டம்’. நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, செந்தில் உட்பட பலர் நடிக்கின்றனர். விக்னேஷ் சிவன் இயக்குகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். அக்‌ஷய்குமார் நடித்து இந்தியில் வெளியான ’ஸ்பெஷல் 26’ படத்தைத் தழுவி இந்தப் படம் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. 


Advertisement


’ஸ்பெஷல் 26’ படத்தில் பாடல்கள் கிடையாது என்பதால் இதிலும் அதிகப் பாடல் காட்சிகள் இருக்காது என்று கூறப்பட்டது. ஆனால், இந்தப் படத்துக்காக அனிருத் 8 பாடல்களை பதிவு செய்துள்ளார். பெரும்பாலும் மாண்டேஜ் பாடல்களாக இடம்பெறும் என்று தெரிகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகிறது. 


Advertisement

Advertisement
[X] Close