[X] Close

வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் புகைப்படம்: அதிர்ந்துபோன முதியவர்..!

இந்தியா

Bengal-Man-Issued-Voter-ID-Card-With-Dog-s-Photo-On-It

 

மேற்கு வங்கத்தில் வாக்காளரின் அடையாள அட்டையில் நபரின் புகைப்படத்திற்கு பதிலாக நாயின் புகைப்படம் இடம் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் சுனில் கர்மாகர் (63). இவர் கடந்த புதன்கிழமை தனது வாக்காளர்அடையாள அட்டையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறி விண்ணப்பம் செய்தார். இதனையடுத்து திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் அட்டையை திரும்ப பெற்ற சுனில் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அட்டையில் சுனிலின் புகைப்படத்திற்கு பதிலாக நாயின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.


Advertisement

image

 

“அனுபவம் வாய்ந்த தோனியை இந்திய அணி மிஸ் செய்கிறது” : குல்தீப் ஓபன் டாக்

இது குறித்து சுனில் கூறும்போது “ திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் என்னை அழைத்தனர். இதனையடுத்து அங்கு சென்ற நான் அடையாள அட்டையை வாங்கி பார்த்தேன். அதில் எனது புகைப்படத்திற்கு பதிலாக நாயின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதனை அதிகாரியும் பார்க்காமல் கையெழுத்திட்டுள்ளார். அவர்கள் எனது கண்ணியத்துடன் விளையாடுகின்றனர். இது குறித்து நான் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் கொடுக்க உள்ளேன்” என்றார்.

image

‘ஏலச்சீட்டால் ரூ50 கோடி நஷ்டம்?’ நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் தற்கொலை

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கூறும்போது “ சுனிலின் வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த புகைப்படம் மாற்றப்பட்டு விட்டது. இந்த அட்டையும் இறுதியானது இல்லை. இதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதுவும் சரிசெய்யப்படும். வாக்காளர் அட்டையில் இடம் பெற்ற நாயின் புகைப்படத்தை பொருத்த வரையில், அதிகாரி ஒருவர் ஆன்லைனில் சுனில் சம்பந்தமான விவரங்களை பதிவு செய்யும்போது தவறு செய்து விட்டார்”என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close