[X] Close

கொரோனா எதிரொலி : உற்சாகம் இழந்த ஹோலி பண்டிகை

இந்தியா

The-festival-of-Holi-festival-in-Delhi-has-been-lost-by-the-echo-of-Corona

ஹோலி பண்டிகைக்கான உற்சாகம் இந்த ஆண்டு வெகுவாக குறைந்து காணப்படுகிறது.


வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக வடமாநிலங்களில் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலியை வரவேற்க தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள், விழாக் கோலம் பூண்டிருக்கும். வரும் 10ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கொண்டாட்ட மனநிலை இன்றி வழக்கமான உற்சாகத்தை இழந்திருக்கிறது டெல்லி மாநிலம். அதற்கு காரணம் ஆட்கொல்லி வைரஸான கொரோனா தான்.

image


Advertisement

சீனாவில் உருவாகி உலகநாடுகளையே ஸ்தம்பிக்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்திருக்கிறது, மத்திய சுகாதாரத்துறை. இந்த வகை வைரஸ் ஒருவரிடம்‌ இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், கூட்டாமான இடங்களைத் தவிர்க்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

image

ஊரே ஒன்றிணைந்து கொண்டாடும் ஹோலி பண்டிகையில் பங்கேற்க மக்கள் அச்சப்படுவதால், கலர் பொடி உள்ளிட்ட பொருட்களின் விற்பனை சரிந்திருப்பதாகக் கூறுகிறார்கள் விற்பனையாளர்கள்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close