[X] Close

கொரோனா அச்சம்: ஒருவாரமாக முகத்தை தொடாத ட்ரம்ப்

உலகம்,கொரோனா வைரஸ்

Trump-did-not-touched-his-face-because-of-corona-fear

கொரோனா வைரஸ் அச்சத்தால் தனது முகத்தை ஒருவார காலமாக தொடவில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனை வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிபர் ட்ரம்ப், முகத்தை கைகளால் தொட்டு ஒருவாரத்திற்கும் மேலாகிறது என்று தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு நாட்டு மக்களை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா எதிரொலி : தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவு? 


Advertisement

image

இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டிய நிலையில், அங்குள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. கொரோனா வைரஸ் ‌பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறு இத்தாலி அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இரண்டு வார காலத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

கொரோனா முன்னெச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் 

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்றும் 5 காசு குறைந்துள்ளது. இன்றைய அந்நியச் செலாவணிச் சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ‌மதிப்பு 5 காசு குறைந்து 73 ரூபாய் 44 காசானது. நேற்று வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு 73 ரூபாய் 39 காசு என நிறைவடைந்திருந்தது. இதற்கிடையில் இந்தியப் பங்குச் சந்தைகள் இன்றி சிறிய ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.


Advertisement

Advertisement
[X] Close