
மதுரை மேலூரில் ரவிச்சந்திரன் என்ற வழக்கறிஞரை அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிச்சந்திரன். நேற்றிரவு இவர், தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்தார். வீட்டின் அருகில் வந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த மூன்று பேர் அரிவாளால் தாக்குதல் நடத்தினர். இதில் தலை மற்றும் காலில் பலத்த காயமடைந்தார் ரவிச்சந்திரன். பின்னர் வெட்டியவர்கள் அசால்ட்டாக தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரவிச்சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து மேலூர் காவல்துறையினர், அவர் வீட்டு முன்பு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளில் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்களில், இருவர் ஹாக்கி மட்டை மற்றும் அரிவாள் கொண்டு கொலைவெறியோடு தாக்குதல் நடத்துவது பதிவாகியுள்ளது.