தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை போலியானது என்கிற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது. அசல் சிலை லண்டனில் இருப்பதற்கான ஆதாரங்கள், புதிய தலைமுறையின் தி ஃபெடரல் இணையதள டிஜிட்டல் செய்திப்பிரிவுக்கு பிரத்யேகமாகக் கிடைத்துள்ளன.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுந்தரப்பெருமாள் கோயில் கிராமத்தில் இருக்கிறது சவுந்தரராஜ பெருமாள் கோயில். இந்த கோயிலைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை போன்ற ஒரு சிலை லண்டன் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பதாக இந்திய தூதரகம் மற்றும் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஃப்ரென்ச் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் புதுச்சேரியில் உள்ள பழைய ஆவணங்களில் இருந்த புகைப்படங்கள் திருமங்கையாழ்வாரின் பழைய சிலையை அடையாளம் காண பயன்படுத்தப்பட்டிருகின்றன. அதாவது 1957ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சிலையின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பார்த்தால், தற்போதுள்ள சிலை வேறு மாதிரியாக உள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் சவுந்தரராஜன் பெருமாள் கோயிலில் தற்போது இருக்கும் திருமங்கை ஆழ்வாரின் உலோகச் சிலை போலி என்பது தெரியவந்துள்ளது. 1957 -67 ஆம் ஆண்டுக்கான இடைப்பட்ட காலத்தில் சிலை மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
இந்த நிலையில், லண்டன் அருங்காட்சியத்தில் உள்ள சிலைதான் அசல் சிலை என்ற உண்மையை தெளிவுபடுத்தும் விதமாக தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் அறிக்கை ஒன்றை அங்கு அனுப்பி உள்ளனர்.
தற்போது அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்த தகவல்கள் என்னென்ன என்பது குறித்து பிரத்யேக தகவல்கள், புதிய தலைமுறையின் தி ஃபெடரல் டிஜிட்டல் இணையதளத்திற்கு கிடைத்துள்ளன. அதன் மூலம் உண்மையான சிலைக்கும், போலி சிலைக்குமான வேறுபாடுகள் தெரியவந்துள்ளன. அதன்படி,
1. இடதுபுறம் உள்ள அசல் சிலையில், தலையின் மேல்புறத்தில் பாம்பின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் வலதுபுறம் உள்ள போலி சிலையில் அவ்வாறு கிடையாது.
2. அசல் சிலையில், தலையின் மையப் பகுதியில் உள்ள முறை போலி சிலையில் மாற்றப்பட்டுள்ளது.
3. அசல் சிலையில், நெற்றியில் பொத்தான் வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கோயிலில் உள்ள சிலையில் அவ்வாறு இல்லை.
4. அசலில், புருவங்களில் உள்ள வளைவு ஒழுங்கான முறையில் காணப்படுகிறது. ஆனால் போலியில், புருவங்கள் ஒழுங்கற்ற முறையில் உள்ளன.
5. அசல் சிலையில், தொப்புளின் மேலே புனித நூல் செல்கிறது. ஆனால் வலதுபுறம் இருக்கும் போலி சிலையில், தொப்புளின் கீழே புனித நூல் செல்கிறது.
6. அசல் சிலையில், மலர்கள் பொறிக்கப்பட்ட ஆடையை திருமங்கை ஆழ்வார் அணிந்திருக்கிறார். ஆனால் போலி சிலை புள்ளிகளுடன் கூடிய உடையுடன் காணப்படுகிறது.
கொரோனா எதிரொலி : தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவு?
7. அசல் சிலையில், அடிவயிற்றுக்கு கீழே தொங்கும் ஆடை மடிப்பின் அகலம் சிறியதாக இருக்கின்றது. போலி சிலையில், ஆடையின் மடிப்பு சற்று அகலமானதாக உள்ளது.
8.அசலில், தொடைவரை நீளும் இடுப்புக்கச்சையின் கரைகள் நுணுக்கமான வேலைப்பாட்டுகளுடன் அமைந்துள்ளது. போலி சிலையில் அந்த வேலைப்பாடுகள் காணப்படவில்லை.
9. அசல் சிலையின் இடுப்புக்கச்சையில் உள்ள கோடுகள் நேர்த்தியாக உள்ளன. ஆனால், போலியில் அவ்வாறு இல்லை.
10. அசல் சிலையின் இடுப்புக்கச்சை வடிவத்திற்கும் போலிக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
11. அசலில் இடுப்புக்கச்சை இருபுறமும் ஒரே உயரத்தில் தொங்கும்படி செதுக்கப்பட்டுள்ளது. போலி சிலையில், இடுப்புக்கச்சையின் உயரத்தில் வேறுபாடுகள் உள்ளன.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!