ராமநாதபுரம் அருகே மன்னார் வளைகுடா கடலில் தூக்கி வீசப்பட்ட சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ தங்கத்தை கடலோர காவல் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்திவரப்படும் தங்கம் உள்ளிட்ட பொருட்களை மன்னார் வளைகுடா தீவு மணலில் புதைத்து வைக்கும் புதுயுக்தியை சமீப காலமாக கடத்தல்காரர்கள் பின்பற்றி வருகின்றனர். இதனிடையே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மன்னார் வளைகுடாவில் இருந்து கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கடந்த 3 ஆம் தேதி தகவல் கிடைத்தது.
அவர்கள் நடத்திய விசாரணையில், கடலோர காவல் படையின் ரோந்து கண்காணிப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த கும்பல் மன்னார் வளைகுடா கடலில் அதனை வீசிவிட்டு, அங்கு ஜிபிஎஸ் அடையாளத்தை வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.
மேலும், கடலோர காவல் படையின் கெடுபிடி குறைந்ததும் ஜிபிஎஸ் அடையாளம் மூலம் தங்கத்தை ராமநாதபுரம் வழியாக சென்னைக்கு கொண்டு சென்று விற்க திட்டமிட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மன்னார் வளைகுடா பகுதியில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியதில், சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு படகு நடுக்கடலில் நின்றிருந்தது. அந்த படகில் இருந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் மண்டபம் பகுதியை சேர்ந்த ஆஷிக், பாரூக் என தெரியவந்தது.
மேலும், இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை முயல் தீவு அருகே நடுக்கடலில் வீசிவிட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து நீச்சல் வீரர்களை வரவழைத்து கடலோர காவல்படையினர் அந்த இடத்தில் சோதனையிட்டதில் 5 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கின.
வறுமையால் தற்கொலைக்கு முயன்ற மாணவர் - சொந்த பணத்தை கொடுத்து உதவிய ஆய்வாளர்..!
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?