[X] Close

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை - முதலமைச்சர் பழனிசாமி

தமிழ்நாடு

CM-Palanisamy-said-about-Coronavirus

தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியவில்லை எனவும், இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

கிருஷ்ணகிரியை அடுத்த போலுப்பள்ளி பகுதியில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் வசதிகளை விட கூடுதல் வசதிகள் உள்ள மருத்துவமனையாக புதிதாக அமையவுள்ள மருத்துவமனை செயல்படும் எனக் கூறினார்.

image


Advertisement

தமிழகத்தில் கடந்த ஆண்டு அதிக மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டும் கூடுதலான மருத்துவ இடங்கள் உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு யாருக்கும்‌ இல்லை என்றார்.

‘சொல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது’: ஐடி ஊழியர்களுக்கு கர்நாடக அரசு நிபந்தனை..!

மேலும் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் எந்த வித அச்சமும் கொள்ளத் தேவை இல்லை எனவும் கூறினார். கொரோனா வைரஸ் நோயை தடுக்க தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close