இந்தியாவின் கிரிக்கெட் பொழுதுபோக்கு ஐபிஎல் என்றால் அதுமிகையல்ல. இந்த டி20 கிரிக்கெட் திருவிழா மார்ச் 29 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. அதற்காக இரு அணியின் வீரர்களும் இப்போதே தயாராகி வருகின்றனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் பலரும் இப்போது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதிர்ந்த சேப்பாக்கம்.. மாஸ் எண்ட்ரி கொடுத்த தோனி: வீடியோ
இதில் மிக முக்கியமாக தோனி எப்போது பயிற்சிக்காக சென்னைக்கு வருவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸின் ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர். தோனி சென்னைக்கு வருவதில் சில நாட்கள் தாமதமானதால் ரசிகர்களின் ஏக்கம் கூடிக் கொண்டே போனது. ஒரு வழியாக தோனி மார்ச் 1 ஆம் தேதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
தோனி சென்னைக்கு வந்துள்ள நிலையில், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நிச்சயம் அவர் பயிற்சிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்க தோனியின் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பெருமளவில் கூடிவிட்டார்கள். அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தோனியும் மார்ச் 2 ஆம் தேதி பயிற்சிக்கு வந்து சேர்ந்தார். அரங்கமே அதிரும் அளவிற்கு அப்படியொரு கரகோஷம். கேப்டன் தோனியுடன் சுரேஷ் ரெய்னா, இந்தாண்டு சிஎஸ்கே அணியில் இணைந்துள்ள பியூஷ் சாவ்லா ஆகியோர் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தோனியை மிஸ் செய்யாமல் எப்படி இருக்க முடியும் ? - இயான் ஸ்மித் ஆதங்கம்
இதனையடுத்து ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பயிற்சி தொடர்பான வீடியோக்கள் போட்டாக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. நேற்று பலத்த ஆர்வத்தோடு சுரேஷ் ரெய்னா வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போட்டோவையும் வீடியோவையும் வெளியிட்டது. மேலும், சேப்பாக்க மைதானத்தில் வலையில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்ட பியூஷ் சாவ்லா பந்தை தூக்கி அடித்து சிக்ஸருக்கு விரட்டினார். இதனை கேடப்டன் தோனியும், சுரேஷ் ரெய்னாவும் அண்ணாந்து அதிசயமாக பார்த்தனர். அடிப்படையில் பியூஷ் சாவ்லா ஒரு சுழற்பந்து வீச்சாளர். எப்போதாவது ஓரளவுக்கு பேட்டிங்கும் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்