[X] Close

நாளை மறுநாள் மாவட்டச் செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினி

சினிமா

Rajinikanth-meets-district-Secretary-at-his-raghavendra-mandapam

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கான கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறுகிறது.

சிஏஏ, என்பிஆர் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். இதனை பல்வேறு தரப்பினர் விமர்சித்த நிலையில், இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்பினரை சந்தித்து பேச தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார். ‌அதன்பேரில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவரை உலமா சபை குருக்கள் சந்தித்துப் பேசி இருந்தார்.

image


Advertisement

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டில் அமைதியை நிலைநாட்ட தன் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்தது தொடர்பாக குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்த், அவர்களது ஆலோசனைகளை கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆமோதிப்பதாகவும்  குறிப்பிட்டிருந்தார்.image

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்த மாவட்டச் செயலாளர்களை சந்திக்க இருக்கிறார். இந்தச் சந்திப்பு வியாழன் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு இச்சந்திப்பு நடைப்பெற்றால் அது மூன்றாவது முறையாக நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடி சில முக்கிய பிரச்னைகள் குறித்து ரஜினிகாந்த் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close