Published : 08,Jun 2017 04:55 PM

குயினாகும் காஜல் அகர்வால்

Kajal-Aggarwal-replaces-Tamannaah-in-Queen-Tamil-remake-

கங்கனா ரணாவத் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளியான படம் குயின். கதாநாயகியை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பிருந்தது. 

குயின் படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கி இருந்தார். இதன் தமிழ் ரீமேக்கில் தமன்னா நடிப்பதாக இருந்தது.
பின்னர் கால்ஷீட் பிரச்னையால்  அவர் விலகினார். இதனால் குயின் தமிழ் ரீமேக் படம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலைபடக்குழு தற்போது மறுத்துள்ளது. தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம் என 4 மொழிகளில் உருவாகும் குயின் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.தமிழில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்