இயக்குநர் விக்ரமன் படத்தில் வரும் ‘எல்லா நாளும் கார்த்திகை’ பாடலை மேற்கோள் காட்டி சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல மாதங்களாகிவிட்டன. அவர் இந்த இடைப்பட்ட காலத்தில் ராணுவத்தில் இணைந்து சேவையாற்றி வந்தார். அதன் பிறகு இந்தியாவிலுள்ள சில மாநிலங்களுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார். அவர் கிரிக்கெட் ஆட்டத்தை விட்டு விலகி வாழ்ந்து வந்தாலும் அவரை அவரது ரசிகர்கள் இடைபட்ட நாளில் கொண்டாடியே வந்தனர். அவரைப் பற்றி செய்திகள் வராத நாளே இல்லை என்றுகூட சொல்லலாம். மீண்டும் அணிக்கு திரும்புவாரா இல்லையா என பெரிய பட்டிமன்றமே நடந்து வந்தது.
இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள 13 ஆவது ஐபிஎல் சீசனில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோனி விளையாட இருக்கிறார். அதற்காக அவர் ஞாயிறு அன்று இரவு சென்னைக்கு வந்துசேர்ந்தார். அதனையடுத்து நேற்று சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து பயிற்சிகளை மேற்கொண்டார். அதற்கான வீடியோ ஒன்றினை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அந்த வீடியோவை கண்ட ‘தல’ தோனியின் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கினர்.
இந்நிலையில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் மகேந்திர சிங் தோனியின் வருகையின் போது சுரேஷ் ரெய்னா கட்டித்தழுவி வரவேற்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே வெளியிட்டுள்ள வீடியோவில் தோனி, அணியின் ஜெர்சியுடன் வருகிறார். மேலும் அதற்கு முன்பாக ரெய்னா பழைய போட்டிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிடுகிறார். மிக உற்சாகமாக தோனியை அதன் பின் ரெய்னா வரவேற்கிறார். அந்த ட்விட்டர் பகுதியில் “எல்லா நாலும் எங்களின் வீட்டில் கார்த்திகை. இந்தப் படத்தை எடுத்தவர் விக்ரமன் சார்’ என நகைச்சுவையாக கூறப்பட்டுள்ளது. மேற்கொண்டு இப்பதிவுக்கு #StartTheWhistles ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Me3t and Gree7 - Everyday is Karthigai in our House, a film by Vikraman Sir. #StartTheWhistles ?? pic.twitter.com/sJz77Nnakr— Chennai Super Kings (@ChennaiIPL) March 3, 2020
சிஎஸ்கேவின் நம்பிக்கைக்குரிய ஆட்டக்காரர்களில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் எட்டு முறை ஃபைனலுக்கு சென்றுள்ளது. அதில், மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. ஆகவே ஐபிஎல் போட்டிகளில் நம்பிக்கை அளிக்கும் அணியாக சிஎஸ்கே இருந்து வருகிறது. சிஎஸ்கே போட்டிக்கு தடை விதிக்கப்பட்டபோது இரண்டு ஆண்டுகளாக குஜராத் லயன்ஸ் அணியை ரெய்னா வழிநடத்தினார். லீக் வரலாற்றில் 5368 ரன்களளை எடுத்து ரெய்னா இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?