[X] Close

‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ மூலம் பெண்களுக்கு ரூ16,712 கோடி கடன் : நிதி அமைச்சகம்

இந்தியா,வணிகம்

Rs-16-712-cr-loan-sanctioned-to-women-under-Stand-Up-India-scheme-Finance-Ministry

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ16,712 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement

பாஜக தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கடந்த ஆறு வருடங்களில் அடுத்தடுத்து அறிமுகம் செய்துள்ளது. அதில் ஒன்றுதான் ஸ்டாண்ட் அப் இந்திய திட்டம். கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை தொழில் செய்ய விரும்பும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கும், பெண்களுக்கும் கடனுதவி வழங்க வகை செய்கிறது. தயாரிப்பு, வர்த்தகம் மற்றும் சேவைகள் பிரிவில் தொழில் செய்ய விரும்புகின்றவர்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்கிறது.

           image


Advertisement

“பீதி அடையாதீர்கள்.. கொரோனாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவோம்” : பிரதமர் மோடி ட்வீட் 


இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் 16,712 கோடி ரூபாய் பெண்களுக்கு கடன் உதவியாக அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தத் திட்டங்கள் பெண்களுக்கு பொருளாதார ரீதியில் மேம்பட்ட வாழ்க்கை பெறவும், அவர்களது தொழில் கனவுகள் நிறைவேறவும் உதவி வருகிறது.

பிப்ரவரி 17 ஆம் தேதி நிலவரப்படி ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின்படி கடனுதவி பெற்றவர்களில் 81 சதவீதம் பேர் பெண்கள். இதன் மூலம் பெண்களுக்காக 73,155 வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ16,712 கோடி கடனுதவி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ9,106 கோடி பெண்களில் வங்கி கணக்குகளுக்கு சென்றுவிட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

 

         image


சாதனைப் பெண்களுக்கு சர்ப்ரைஸ்: சஸ்பென்ஸை உடைத்தார் மோடி..! 


இதனிடையே, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்றவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் சாராத சிறு தொழிலாளர்களுக்கு ரூ10 லட்சம் வரை கடனுதவி வழங்கும் நோக்குடன் 2015ம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதான் மந்திரி யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close