Published : 08,Jun 2017 03:52 PM

குடியரசுத் தலைவர் தேர்தல்: அதிமுக ஆதரவு யாருக்கு?

President-Election--Will-ADMK-back-BJP-

குடியரசுத் தலைவர் தேர்தலில் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியான அதிமுகவின் ஆதரவு குறித்து  அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து  வருகின்றனர். 

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17ல் நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக நிறுத்தும்  வேட்பாளருக்கு அதிமுக ஆதரவளிக்கும் என இல.கணேசன் எம்.பி. கூறியிருந்தார். அவரது கருத்தை  ஆமோதிப்பது போல பேசிய அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜக  என்ன தீண்டத்தகாத கட்சியா என்று எதிர்கேள்வி எழுப்பினார். ஆனால், அதிமுகவின் ஆதரவு குறித்து  அந்த கட்சியினர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் வேறு ஒரு கருத்தினை தெரிவித்தார். இந்தநிலையில் செய்தியாளர்களிடம்  பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு  ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. பாஜகவுக்கு ஆதரவு என்பது  இல.கணேசனின் கருத்து என்று கூறினார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்