Published : 02,Mar 2020 01:02 PM

மகன் ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் - வைரலான வீடியோ

Birthday-party-videos-of-Ajith-son-go-viral

அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உண்டு. அவர் எதுவும் பேசுவதில்லை என்றாலும் அவரைப் பற்றி சமூக வலைத்தளத்தில் தினமும் அவரது ரசிகர்கள் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள். தினமும் அஜித்தை பற்றி ஏதாவது ஒன்றை தேடிப்பிடித்து அவரது ரசிகர்கள் அதை செய்தியாக்கி விடுகிறார்கள். ஒன்று அது அவரது படம் சார்ந்ததாக இருக்கலாம். அல்லது அவரது சொந்த வாழ்க்கை சார்ந்ததாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை வெறித்தனமாக விரும்புவது அவரது ரசிகர்களின் பாணியாக இருந்து வருகிறது.

image

இதனிடையே, இரு தினங்கள் முன்பு அஜித், துப்பாக்கிச் சுடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் மீண்டும் வைரலாக மாறியது. காதில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு அவர் குறிவைத்து சுடுகிறார். காதில் உள்ள ஹெட்ஃபோனில் நம் நாட்டின் தேசியக் கொடி வரையப்பட்டிருந்தது. அஜித், சாதாரணமான பச்சை நிற டி-ஷர்ட்டில் இருந்தார். இதற்கு சில தினம் முன்பாக அஜித், தனது மனேஜரின் உறவினர் திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தன.

இந்நிலையில், அஜித்தின் ரசிகர்கள் அவரது மகனின் பிறந்தநாளை சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். அதற்காக ட்விட்டரில் #HBDAadvikAjith மற்றும் #HBDChampAadvikAjith என்ற ஹேஷ்டேக்குகளை போட்டு வைரலாக்கி வருகின்றனர். மேலும், அஜித்தின் மகன் ஆத்விக் கேக் வெட்டுவது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதில் அஜித், ‘அக்கா எங்கடா?’ என மகனைப் பார்த்து கேட்கிறார். அதற்கு ஆத்விக், ‘அக்கா’ என குரல் கொடுத்து அழைக்கிறார். அஜித் மற்றும் ஷாலினி தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். அவரது பெயர் அனொஷ்கா.

image

அஜித், தற்போது ஹெச்.வினோத் இயக்கி வரும் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அஜித் இந்தப் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும், அவர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அஜித்தின் மகன் ஆத்விக்கிற்கு இன்று 5 வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்