Published : 02,Mar 2020 12:05 PM
வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் குடிநீர் ஆலைக்கு சீல்

வேலூர் மக்களவை தொகுதி எம்பியும், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான கேன் குடிநீர் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி பொதுப்பணித்துறை நிலநீர் கோட்ட செயற்பொறியாளர் அனுமதி பெறாமல் இயங்கி வரும் மினரல் வாட்டர் நிறுவனங்கள் மீது தமிழகம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை, சிக்கல், வேளாங்கண்ணி, திருமருகல், சீர்காழி, செம்பனார்கோவில் உள்ளிட்ட 16 இடங்களில் உரிய அனுமதி இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்துவந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
ரயில்கள், ரயில் நிலையங்களில் 165 பாலியல் வன்கொடுமைகள்.. அதிர்ச்சி தகவல்..!
இதனிடையே, வேலூரில் செயல்பட்டு வரும் 40 கேன் குடிநீர் ஆலைகளில் 37 ஆலைகள் அனுமதியின்றி செயல்படுவதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், தற்போது வேலூர் மக்களவை தொகுதி எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான கேன் குடிநீர் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி குடிநீர் ஆலை செயல்பட்டதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.