[X] Close

தொன்மைச் சிறப்பு வாய்ந்த இடங்கள் இனி மத்திய அரசிடம்..?

இந்தியா

State-owned-monuments-to-be-controlled-by-Centre

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொன்மைச் சிறப்பு வாய்ந்த இடங்களை இந்திய தொல்லியல் அமைப்பின் கீழ் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


Advertisement

தற்போது இந்திய தொல்லியல் அமைப்பின் கீழ் 3,691 புராதனச் சின்னங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 745 இடங்கள் இந்திய தொல்லியல் அமைப்பின் கீழ் உள்ளன. இந்நிலையில் மாநிலங்களின் வசம் இருக்கும் தொன்மைச் சிறப்பு வாய்ந்த இடங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு: மத்திய அரசு 


Advertisement

image

இது தொடர்பாக மாநில கலாசாரத்துறை அமைச்சர்களுடன் கூட்டம் நடத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அந்தக்கூட்டம் இம்மாதம் இறுதியில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தொன்மைச் சிறப்பு வாய்ந்த இடங்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரமாக அதிகரிக்கும் என அமைச்சர் பிரகலாத் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

சென்னையில் கடலோர விரைவு போக்குவரத்திற்காக ஆய்வு.. எதிர்ப்பு கிளம்புவது ஏன்..? 

மேலும், தமிழகத்தில் உள்ள 7 ஆயிரத்திற்கும் அதிகமான கோயில்களில் பல, 100 ஆண்டுகள் பழமையானவை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மாநிலங்கள் வசம் இருக்கும் சில இடங்கள் மத்திய அரசின் வசம் எடு‌த்துக் கொள்ளப்படும் அதேநேரத்தில் சில இடங்கள் மத்திய அரசின் வசம் இருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close