[X] Close

இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு: மத்திய அரசு

இந்தியா

Two-More-Indians-affected-by-Corona-Virus

இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

image

இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கும், துபாயிலிருந்து தெலங்கானா திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.


Advertisement

கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் 2 ஆவது நபர் உயிரிழப்பு 

image

"ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வ‌ர நடவடிக்கை"- ஜெய்சங்கர் 


Advertisement

இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 912 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 42 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். சீனாவில் 80 ஆயிரத்து 26 பேரை கொரோனா தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close