[X] Close

கார் மோதிய விபத்தில் சைக்கிளில் சென்ற மாணவி பலி

தமிழ்நாடு

10th-Std-School-Girl-die-for-Car-Accident-in-Near-Theni

கடலூரில் கார் மோதிய விபத்தில் மிதிவண்டியில் சென்ற பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள அரசு மாடர்ன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் புவனேஸ்வரி மற்றும் ஸ்ரீவித்யா ஆகிய இரண்டு மாணவிகளும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஐவதுகுடி பள்ளிக்கு முன்பு சாலையை கடக்கும்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற டாட்டா சுமோ வாகனம் சைக்கிளில் வந்த மாணவிகள் மீது மோதியது.

image


Advertisement

இதில் தூக்கி வீசப்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இரண்டு மாணவிகளில் சமத்துவபுரத்தை சேர்ந்த புவனேஸ்வரி, அதிக ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த திருப்பெயர் கிராமத்தைச் சார்ந்த ஸ்ரீவித்யா கவலைக்கிடமான முறையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

image

சாலை விபத்து ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றதால், வேப்பூர் காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர். பள்ளி மாணவி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

மேகாலயா தலைநகரிலும் வன்முறை : 3 பேர் பலி


Advertisement

Advertisement
[X] Close