குழந்தைகளுடன் கணவரை தேடித் திரிந்த மனைவி : சாலையில் மயங்கி விழுந்த பரிதாபம்

குழந்தைகளுடன் கணவரை தேடித் திரிந்த மனைவி : சாலையில் மயங்கி விழுந்த பரிதாபம்
குழந்தைகளுடன் கணவரை தேடித் திரிந்த மனைவி : சாலையில் மயங்கி விழுந்த பரிதாபம்

மதுரையில் இரண்டு குழந்தைகளுடன் கணவரைத் தேடி அலைந்த மனைவி சாலையில் மயங்கி விழுந்த சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள பொத்திசுத்தி பகுதியைச் சேர்ந்தவர் பபிதா (30). மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள மாவு மில் ஒன்றில் வேலைபார்த்த போது காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் லிங்கேஷ்வரன் என்ற ஆண் குழந்தையும், 2 வயதில் தன மீனாட்சி என்ற பெண் குழந்தையும் உள்ளனர். முன்னதாக திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், பிரிந்துவிட்டனர்.

இதைத்தொடர்ந்து கணவர் மீது காவல்நிலையத்தில் சென்று புகார் கொடுத்து அவரை பபிதா மீட்டுள்ளார். பின்னர் குழந்தை பிறந்த பிறகும் கூட தன்னை தனியே தவிக்கவிட்டுவிட்டு பலமுறை சுரேஷ் சென்றுவிட்டதாக பபிதா கூறுகிறார். காவல்நிலையத்தில் கணவரைக் கண்டுபிடித்து தருமாறும், தொடர்ந்து பபிதா புகார் கொடுத்து வந்துள்ளார்.

காவல்துறையினர் சுரேஷை கைது செய்ததோடு, இருவரையும் சில மாதங்களுக்கு முன்பு ஒன்றாக சேர்த்து வைத்துள்ளனர். ஆனாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் சுரேஷ் இரண்டு குழந்தைகளையும், மனைவி பபிதாவையும் மீண்டும் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

பபிதா இரண்டு குழந்தைகளையும் கையில் பிடித்த படி தனது கணவரைத் தேடி அலைந்துள்ளார். முந்தானையில் குழந்தைகளை முடிந்து வைத்துக்கொண்டு, உடைமைகளை பையில் வைத்துக்கொண்டு, மதுரையின் பல்வேறு இடங்களுக்கு நடந்தபடியே சென்றுள்ளார். மதுரை பனகல் ரோட்டில் நடந்து சென்றபோது, திடீரென பசி மயக்கத்தால் பபிதா மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவருக்கும் குழந்தைகளுக்கும் தண்ணீர் மற்றும் சாப்பாடு வாங்கி கொடுத்து உதவி செய்தனர். அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு அங்கிருந்தவர்கள் கலங்கினர். அப்பெண்ணுக்கு காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் உதவ வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com