பாலின் தரத்தை அறிய இலவச சோதனை முகாம்

பாலின் தரத்தை அறிய இலவச சோதனை முகாம்
பாலின் தரத்தை அறிய இலவச சோதனை முகாம்

பாலின் தரத்தை பொதுமக்கள் நேரடியாக பரிசோதித்து அறிந்து கொள்ளும் இலவச முகாம் மதுரையில் தொடங்கியுள்ளது. 

5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த முகாம் கோ.புதூரில் நடைபெறுகிறது. தனியார் பால் நிறுவனங்களின் பாலில் ரசாயனக் கலப்பு இருப்பதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த சூழலில் பாலின் தரத்தை பரிசோதித்து அறிந்து கொள்ள மதுரை மாவட்ட நிர்வாகத் தரப்பில் இலவச சோதனை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் கொண்டு வரும் பாலை, இலவசமாக பரிசோதித்து சான்றிதழ் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி பால் விநியோக முகவர்களும் பாலை பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com