[X] Close

அம்மனாக நயன்தாரா: "மூக்குத்தி அம்மன்" ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா

Nayanthara-as-Goddess-Mookuthi-Amman-first-look

நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள "மூக்கத்தி அம்மன்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.


Advertisement

‘எல்கேஜி’ படத்தின் வெற்றியை அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்குநராக அறிமுகமாக உள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். படத்தின் மொத்த கதையும் நயன் மீதுதான் பயணிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கான படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி அண்மையில் முடிவடைந்தது.

image


Advertisement

ஹாரி தம்பதிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ரத்து: கனடா அரசு 

முன்னதாக, நயன்தாரா கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயில் மற்றும் திருச்செந்தூரிலுள்ள முருகன் கோயில் ஆகிய இரண்டு இடங்களுக்கும் விக்னேஷ் சிவனுடன் சென்று வழிபட்டார். இந்தப் படத்திற்காகவே இவர் சைவ உணவு பழக்கத்திற்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா ஏற்கெனவே கடந்த 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்திருந்தார். ஆனால் தமிழில் நயன்தாரா முதன்முறையாக ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் தெய்வமாக நடிக்கிறார்.

image


Advertisement

இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். இப்படம் நாகர்கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்ட உள்ளது. படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் "மூக்குத்து அம்மன்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. இதில் அம்மன் தோற்றத்தில் நயன்தாரா கையில் சூலத்த்துடன் காட்சி தருகிறார்.


Advertisement

Advertisement
[X] Close