தடையை மீறி ம.பிக்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தி கைது

தடையை மீறி ம.பிக்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தி கைது
தடையை மீறி ம.பிக்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தி கைது

போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை சந்திப்பதற்காக மத்தியப் பிரதேச மாநிலத்துக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.
 
மத்தியப்பிரதேச மாநிலத்தின் நீமுச் பகுதி வழியாக வன்முறை நடந்த மந்த்சவுர் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர். எல்லையில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி மோட்டார் சைக்கிள் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் செல்ல முயன்றபோது  போலீசார் அவரைக் கைது செய்தனர். வன்முறை நடந்த பகுதியைப் பார்வையிட ராகுல் வந்தால், அவரை அனுமதிக்க மாட்டோம் என்று போலீசார் தெரிவித்திருந்தனர். விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் 5 பேர் உயிரிழந்தனர். ராகுல் கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங், அந்த பகுதிக்கு இப்போது ராகுல் செல்லும் அளவுக்கு என்ன அவசரநிலை ஏற்பட்டு விட்டது என்று கேள்வி எழுப்பினார்.    

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com