Published : 27,Feb 2020 12:26 PM
“ஆம் ஆத்மி கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டால் இரட்டிப்பு தண்டனை கொடுங்கள்” - கெஜ்ரிவால்

டெல்லி வன்முறை சம்பவத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றவாளி என கண்டறியப்பட்டால் இரட்டிப்பு தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையில் நடைபெற்ற மோதலை அடுத்து மாபெரும் வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. வன்முறை காரணமாக 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்.. உயிர்ப்பலிகள் தொடர்வது நியாயமா..?
இந்நிலையில், டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “சிஏஏ போராட்டங்களை தூண்டும் வகையில் காங்கிரஸ் தலைவர்களான ராகுல், பிரியங்கா நடந்து கொள்கின்றனர். கையில் ஆயுதத்துடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சரின் இந்த குற்றச்சாட்டுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார்.
“சிங்கத்தை பிடித்து சென்றுவிட்டாயே..” : மதுரையில் எமதர்மனுக்கு கண்டன போஸ்டர்..!
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளி என அறியப்பட்டால், யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்கள் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் தண்டனை இரட்டிப்பாக்கப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பு பிரச்சினையில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது. வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சமும், வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
வன்முறை சம்பவங்கள் நடந்த மூன்று நாட்களுக்கு பின் நேற்று தான் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.