[X] Close

டெல்லி வன்முறை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிட மாற்றம்

இந்தியா,அரசியல்

S-Muralidhar-transferred-to-Punjab-Haryana-HC-Bar-Council-condemns-move

 


Advertisement

டெல்லி வன்முறை வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த சனிக்கிழமை டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையம் அருகே எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இதற்கு அடுத்த நாள் அதே இடத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக சிலர் பேரணி நடத்தினர். அப்போது திடீரென இந்த இரு அமைப்புகளுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 30 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.


Advertisement

 

image

இதனிடையே கலவரம் தொடர்பாகவும், பாஜக தலைவர்கள் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாகவும் சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்திர், ஃபரா நக்வி ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தொடர்ந்தனர். மேலும் இதனை அவசர வழக்ககாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.முரளிதர், தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.


Advertisement

அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, துணை ஆணையர் ராஜேஷ் ராவ், காவல்துறை சிறப்பு ஆணையர் பிரவீர் ரஞ்சன், ஆகியோரிடம் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய பாஜக தலைவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என எஸ்.முரளிதர் கேள்வி எழுப்பினார்.

image

“இஸ்லாமியர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகளே”- போராட்டத்தில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி..!

வாகனங்களுக்கு தீ வைப்பு, கல்வீச்சு போன்றவைகளுக்கு வழக்குப்பதிவு செய்த நீங்கள் ஏன் வன்முறையை தூண்டும் விதமாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரவீர் ரஞ்சன், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனைக்கேட்ட நீதிபதி பாஜக தலைவர்களான அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா, கபில் மிஸ்ரா ஆகியோரின் பேச்சுகளை ஆராய்ந்து போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அத்துடன் கலவரத்தை அடக்க பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

image

பியர் கிரில்ஸ் உடன் ரஜினிகாந்த்: ஒளிபரப்பு தேதியை வெளியிட்ட தொலைக்காட்சி

இந்நிலையில் தற்போது நீதிபதி முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக நீதிபதி முரளிதர் உட்பட மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்வது குறித்து உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த 12-ஆம் தேதி பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே பணியிட மாற்றத்திற்கு 3 பேர் ஒரே நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட போதும் எஸ்.முரளிதர் மட்டும் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்படுவதாக பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார். டெல்லி வன்முறை வழக்கு தொடர்பாக, போலீஸ் மீது கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்த நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.

 

Related Tags : Muralidhar Punjab Haryana

Advertisement

Advertisement
[X] Close