Published : 27,Feb 2020 02:50 AM
நெருக்கடியான நிலைகளை பக்குவமாக கையாளும் அஜித் தோவல்.. டெல்லி நிலைமையை சரிசெய்வாரா..?

டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளி்ல் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவரான அஜித் தோவல் கைதேர்ந்த உளவாளி. பதற்றம் நிறைந்த, நெருக்கடியான சூழ்நிலைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்த இவர், 1968-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக கேரளாவில் பணிபுரிந்தார்.
இவர் ரா உளவாளியாக இருந்தபோது பாகிஸ்தானில் 7 ஆண்டுகள் தங்கியிருந்து தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டங்களையும், செயல்பாடுகளையும் இந்திய ராணுவத்திற்கு தெரிவித்தார். மேலும் பஞ்சாப், மிசோரம் மாநிலங்களில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தினார். அதேபோல கந்தகார் விமானக்கடத்தல் தொடங்கி மொத்தம் 15 விமானக் கடத்தல்களில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிணையக் கைதிகளின் விடுதலைக்கு காரணமாக இருந்தார்.
பாகிஸ்தானுக்கும் பரவிய கொரோனா.. 2 பேர் பாதிப்பு
இவரது ராஜதந்திரத்தால் பதவி இழந்தவர்களில் நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி.ஒலியும் ஒருவர். பஞ்சாப், மிசோரம், காஷ்மீரில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சாமர்த்தியமாக காய்கள் நகர்த்தி அவர்களை வீழ்த்திய தோவல் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் நடந்த உரித் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் மூளையாக செயல்பட்டவர்.
ஐபிஎல் 2020 : எப்படி இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி..?
எதிராளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கட்டுப்படுத்தும் திறமை கொண்டவர் என்பதாலேயே டெல்லியில் சி.ஏ.ஏ.வை முன்வைத்து நடைபெற்று வரும் போராட்டங்களை கட்டுப்படுத்தி, அமைதியை திரும்ப செய்வதற்கான மிகப்பெரிய பொறுப்பு அஜித் தோவலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.