"ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி"- அரவிந்த் கெஜ்ரிவால்

"ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி"- அரவிந்த் கெஜ்ரிவால்
"ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி"- அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி கலவரத்தின்போது உயிரிழந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமைக் காவலரின் உடல், அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் சிக்கார் பகுதியைச் சேர்ந்த ரத்தன் லால் என்பவர் டெல்லியில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். அவர், கடந்த 24-ஆம் தேதி டெல்லியின் வடகிழக்கு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வெடித்த வன்முறையில் உயிரிழந்தார்.

அவரது உடல் ராஜஸ்தானுக்கு கொண்டு வரப்பட்டு,‌ குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com