[X] Close

டெல்லி வன்முறை: தற்செயலா? திட்டமிடப்பட்டதா?

சிறப்புச் செய்திகள்

special-story-of-delhi-violence

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் நடைபெற்ற இருவேறு பேரணியில் இருதரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் 3-ஆவது நாளாக நேற்றும் வன்முறைகள் தொடர்ந்தன. வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement

அமைதி மற்றும் சகோதரத்துவத்தை பேண டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

இதைத்தொடர்ந்து வன்முறைகளை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரே நாளில் 3 முறை ஆலோசனைகள் நடத்தினார். இதில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது டெல்லியில் அமைதி திரும்ப அனைத்து கட்சிகளும் உதவ வேண்டும் என அமித் ஷா கேட்டுக்கொண்டார்.


Advertisement

image

ஆனாலும் எந்த பயனும் இல்லை. செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்களுக்குகூட பாதுகாப்பு இல்லாத நிலைதான் டெல்லியில் இருக்கிறது என நமது செய்தியாளர் கள ஆய்வில் இருந்து தகவல் தெரிவிக்கிறார். என்டிடிவியை சேர்ந்த செய்தியாளர்கள் 2 பேர் கூட தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லையா?: நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரிழிவு நோய்


Advertisement

இதற்கிடையில் டெல்லியில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கான சிறப்பு ஆணையராக சிஆர்பிஎஃப்பை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி எஸ்.என்.ஸ்ரீவஸ்தவாவை உள்துறை அமைச்சகம் நியமித்தது. அதேசமயம் டெல்லி கலவரத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் ராணுவத்தை களம் இறக்க வேண்டுமென்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Image result for delihi violence

கலவரமும் வன்முறையும் இவ்வளவு தீவிரமாகும்வரை ஏன் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது? திடீரென ட்ரம்ப் இந்தியா வரும் நேரம் பார்த்து வன்முறை வெடித்தது ஏன்? திட்டமிடப்பட்டு டெல்லி வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதா? என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

இதுகுறித்து பத்திரிகையாளர் விஜயசங்கர் கூறும்போது “ட்ரம்ப்பும் மோடியும் சபர்மதியில் காந்தியை பற்றி நினைவு கூறுகிறார்கள். ஆனால் அதே சமயத்தில் டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இது உலக மகா போலித்தனம். போலீஸை கையில் வைத்திருக்கும் மத்திய அரசு கண்ணுக்கு முன்பு நடக்கும் வன்முறையை தடுக்காமல் பயங்கரவாதத்தை தடுப்போம் என பேட்டி கொடுக்கிறார்கள். இவ்வளவு நாட்கள் அமைதியாக நடந்து கொண்டிருந்த போராட்டம் இப்போது எந்த சூழ்நிலையில் வன்முறையாக வெடிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். பாஜக வெற்றி பெற்ற 8 தொகுதிகளில் மட்டும் நடப்பது ஏன்” எனக் கேள்வி எழுப்பினார்.

image

சிறார் ஆபாசப்படத்தை சமூக வலைதளத்தில் பரப்பியதாக ஒருவர் கைது..!

இதுகுறித்து வலதுசாரி ராமசுப்ரமணியன் கூறுகையில், “ட்ரம்ப் வரக்கூடிய இந்த சமயத்தில் படையை இறக்கினால் அது இன்னும் கலவரத்தை அதிகப்படுத்திவிடுமோ என்று மத்திய அரசு நினைத்திருக்கலாம். கலவரத்தை தூண்டியது இவர்கள்தான் என பாஜகவினர், இஸ்லாமியர்கள் என்று யாரையும் குற்றம் சொல்லவில்லை. ஆனால் விசாரணையை தொடங்காத நிலையில் நாமாக சித்தரித்து பேசுவது சரியாக இருக்காது” எனத் தெரிவித்தார்.

Image result for ராமசுப்ரமணியன்

அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சித் தலைவர் பொன்ராஜ் கூறும்போது “ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். அமைதியாக போராடுவதற்கு கூட இந்தியாவில் உரிமை இல்லையா? போலீஸ் கைகள் கட்டப்பட்டுள்ளன. துப்பாக்கி கலாசாரம் தலைத்தூக்கியுள்ளது. இப்படி போராடுவதால் கண்டிப்பாக சிஏஏ சட்டத்தை திரும்ப பெற மாட்டார்கள். சட்டப்படி போராடி இஸ்லாமியர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய கருத்து” எனத் தெரிவித்துள்ளார்.

Image result for பொன்ராஜ்

“ட்ரம்ப் வந்திருக்கும்போது இதுபோன்ற செயல்களில் பாஜக இறங்குமா என்பது சந்தேகமே. அதை நான் ஏற்கவில்லை” எனத் தெரிவிக்கிறார் முன்னாள் ஆலோசகர் நடராஜன்.


Advertisement

Advertisement
[X] Close