ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் இரு அணி வீரர்களின் பட்டியலை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் 6 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால் ஒரு பாகிஸ்தான் வீரர் கூட ஆசிய லெவன் அணியில் இடம் பெறவில்லை.
நெருங்கும் ஐபிஎல் 2020 : ஆர்.சி.பி அணியின் பலம்; பலவீனம் என்ன?
வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி மார்ச் 18, 21 தேதிகளில் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் இடையிலான டி20 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. வங்கதேச தலைநகரான டாக்காவில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆசிய லெவனில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். உலக லெவனில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஆசிய லெவனில் இந்திய அணியில் இருந்து 6 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில், விராட் கோலி, கேஎல் ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பன்ட், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் கேஎல் ராகுல் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக லெவன் அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் டூ ப்ளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஆசிய லெவன் அணிக்கு யார் கேப்டன் என தெரிவிக்கப்படவில்லை.
சூதாட்டப் புகாரில் சிக்கிய ஓமன் நாட்டு கிரிக்கெட் வீரருக்கு 7 ஆண்டுகள் தடை
ஆசிய லெவன் வீரர்கள் பட்டியல் : கேஎல் ராகுல், விராட் கோலி, ஷிகர் தவான், ரிஷப் பன்ட், முகமது ஷமி, குல்தீப் யாதவ், லிட்டன் தாஸ், தமீம் இக்பால், முஷ்பிகுர் ரஹீம், திசாரா பெரேரா, ரஷீத் கான், முஸ்தபிசுர் ரஹ்மான், சந்தீப் லாமிச்சனே, லசித் மலிங்கா, முஜீபூர் ரஹ்மான்.
உலக லெவன் அணி வீரர்கள் பட்டியல்: அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் கெயில், டூ ப்ளசீஸ், ராஸ் டெய்லர், ஜானி பேர்ஸ்டோவ், பொல்லார்ட், அதில் ரஷீத், காட்ரெல், லுங்கி நிகிடி, ஆண்ட்ரூ டை, மிட்சல் மெக்லெனாகன்
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்