இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தங்க ஐடிசி மவுர்யா ஓட்டல் தயார் நிலையில் உள்ளது
இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரடியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்திறங்குகிறார். நண்பகல் 11.40 மணிக்கு ட்ரம்ப் வரும் நிலையில், விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரை, லட்சக்கணக்கானோர் பங்கேற்று பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்கவுள்ள ஓட்டல் அவருக்காக தயார் நிலையில் உள்ளது.
டெல்லி வரும் மிக முக்கியமான வெளிநாட்டு தலைவர்கள் தங்கும் ஓட்டல் ஐடிசி மவுர்யா. இதே ஓட்டலில் தான் ட்ரம்பும் தங்க உள்ளார். அதி முக்கிய தேச தலைவர்களுக்கென்றே சாணக்யா என்ற பெயரில் இரு படுக்கை அறை கொண்ட அதிசொகுசு விடுதி இங்கு உள்ளது. பிரசிடென்ஷியல் சூட் எனப்படும் இந்த சாணக்யா அறையில் ஏற்கனவே இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள் ஜிம்மி கார்ட்டர், பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் தங்கியிருந்தனர்.
உணவை சோதிக்கும் மைக்ரோபயாலஜி ஆய்வுக் கூடம், உடற் பயிற்சிக் கூடம், கண் கவரும் கலைப் பொருட்கள், அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் என இந்த அறையின் வசதிகள் நீண்டு கொண்டே செல்கின்றன.சர்வதேச சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த விதிகளுக்கு உட்பட்டு இங்குள்ள காற்றின் தரம் பராமரிக்கப்படுகிறது.
இத்தனை வசதிகள் கொண்ட சாணக்யா அறையின் ஒரு நாள் கட்டணம் 8 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தங்குகிறார் என்பதால் பாதுகாப்பு கருதி அவர் மற்றும் அவருடன் வருபவர்களுக்கு மட்டுமே இங்குள்ள அனைத்து அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சபர்மதி ஆசிரமம் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை: ட்ரம்பின் சுற்றுப்பயண விவரம்
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்