
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி - 2 படத்தின் டீசரை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சான் ட்விட்டரில் வெளியிட்டார்.
37 விநாடிகள் கொண்ட டீசரில் தனுஷின் ராகவன் கதாபாத்திரம் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. சமுத்திரக்கனியும் சில விநாடிகள் வந்துபோகிறார். ஆனால், ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் கஜோல் ஒரு பிரேமிலும் காட்டவில்லை. வேலையில்லா பட்டதாரி-2வில் தனுஷூக்கு வில்லியாக பிசினஸ் வுமன் ரோலில் கஜோல் கலக்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் ஒரு பிரேமிலும் இல்லாதது ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அவர் தமிழில் நடித்த மின்சாரக்கனவு 1997ல் வெளியானது. டீசர் வெளியான சில நிமிடங்களில் #VIP2 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. முதல் பாகத்தில் நடித்த சமுத்திரக்கனி, அமலா பால், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இந்த படத்திலும் இடம்பெற்றுள்ளனர். வேல்ராஜ் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகமாக இது உருவாகியுள்ளது.