
இந்திய அணியின் பாகுபலி யார் என்பது குறித்து ரோகித் ஷர்மா சுவையான தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
நீங்கள் நினைப்பது போல விராத் கோலியோ, தோனியோ, யுவராஜ் சிங்கோ அல்லது வேகப்பந்து வீச்சாளர்களோ இந்திய அணியின் பாகுபலி இல்லையாம். மாறாக ஷிகர் தவானின் மகன் ஜோராவெர் தான் இந்திய அணியின் பாகுபலி என்று ரோகித் ஷர்மா வர்ணித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றினைப் ரோகித் பதிவிட்டுள்ளார். அதில், ரோகித் ஷர்மா மற்றும் அஜிங்கியா ரஹானேவுடன் ஷிகர் தவானின் மகன் ஜோராவர் உடனிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்திய அணியின் பாகுபலியோடு நேரம் செலவழிப்பது எப்போதும் மகிழ்ச்சி தரக்கூடியது என்று அந்த வீடியோவுக்கு ரோகித் ஷர்மா கேப்ஷன் கொடுத்துள்ளார். ஜோரோவரை தன்னுடன் வந்து அமருமாறு ரோகித் ஷர்மா கேட்பது போல புகைப்படம் ஒன்றினை ஷிகர் தவானும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.