பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா தனது வெற்றிப் பயணத்தை தொடங்கியுள்ளது.
சர்வதேச பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று சிட்னி மைனாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் தீப்தி ஷர்மா 49 (46), சஃபாலி வெர்மா 29 (15), ஜெமிமா 26 (33) ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜெஸ் ஜொனாஸன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனை அலிஸ்ஸா ஹாலே 51 (35) ரன்களை குவித்தார். ஆனால் மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் வந்தவர்களில் அஷ்லைக் கார்ட்னெர் மட்டும் 34 (36) ரன்கள் சேர்க்க, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலிய அணி எடுத்தது. இந்திய அணியின் சார்பில் பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்ட நாயகியாக பூனம் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றியை தொடங்கியுள்ள இந்திய அணி கோப்பையை வெல்லுமா ? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?