[X] Close

''விடைத்தாளில் ரூ.100 வைங்க போதும்''- பொதுத்தேர்வில் பாஸ் ஆக டிப்ஸ் கொடுத்த பள்ளி முதல்வர்

இந்தியா

UP-School-Principal-s-Advice-To-Students

உத்திரப்பிரதேச மாநில பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு எப்படியெல்லாம் வெற்றி பெறலாம் என மாணவர்களுக்கு டிப்ஸ் வழங்கிய பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர்

பொதுவாக பொதுத்தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என ஆசிரியர்கள் அறிவுரை வழங்குவார்கள். அதற்கு எப்படியெல்லாம் படிக்கவேண்டுமென்று குறிப்பு கொடுப்பார்கள். ஆனால், உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வர் எப்படியெல்லாம் ஏமாற்றி பாஸ் ஆகலாம் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

image


Advertisement

உத்திரப்பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வரான ப்ரவீன் மால் என்பவர் பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட மாணவர்களுக்கு அடுக்கடுக்கான அறிவுரைகளை வழங்கியுள்ளார். அங்குள்ள மாணவர் ஒருவர் இதனை செல்போனில் படம்பிடித்து புகார் தெரிவிக்க இந்த விவகாரம் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

image

அந்த வீடியோவில் பேசும் பள்ளி முதல்வர், ''என்னுடைய மாணவர்கள் யாருமே தேர்வில் ஃபெயில் ஆக மாட்டார்கள். அதனால், நீங்கள் பயப்பட வேண்டாம். தேர்வு அறைக்குள் நீங்கள் பேசிக் கொள்ளலாம். ஆனால், தொட்டுகொண்டு பேசாதீர்கள். அரசுப் பள்ளிகளில் உள்ள தேர்வு கண்காணிப்பாளர்கள் பல பேர் என் நண்பர்கள் தான். அப்படி நீங்கள் மாட்டிக் கொண்டாலும் நீங்கள் பயப்பட வேண்டாம். அவர்கள் உங்களை கன்னத்தில் அறைவார்கள். அதைமட்டும் தாங்கிக் கொள்ளுங்கள்.

காதலனுடன் வாழ பெற்றக் குழந்தையையே கொலை செய்த இளம்பெண்! அதிரவைக்கும் வாக்குமூலம்

அதேபோல எந்த கேள்வியையும் விட்டுவிடாதீர்கள். எதையாவது எழுதுங்கள். அப்படியே ஒரு 100ரூபாயை உங்கள் விடைத்தாளில் வைத்துவிடுங்கள். உங்களுக்கு தன்னால் மதிப்பெண்கள் வரும். 4 மதிப்பெண் கேள்விக்கு நீங்கள் தவறாக எழுதி இருந்தாலும் 3 மதிப்பெண்கள் நிச்சயம் உண்டு'' என தெரிவிக்கிறார்.

image

பள்ளி முதல்வரின் அறிவுரையை கேட்கும் மாணவர்கள் எல்லாம்.. 'அட இது நல்லா இருக்கே' என்று கூறுகின்றனர். இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. பள்ளி முதல்வரை கைது செய்துள்ள போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கேமரா, தேர்வு கண்காணிப்பாளர்கள் என பொதுத்தேர்வில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக உபி அரசு தெரிவித்திருக்கும் நிலையில், பள்ளி முதல்வரின் அறிவுரை வீடியோ உபி மாநில பொதுத்தேர்வு மீதான நம்பிக்கையை குறைப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close