Published : 07,Jun 2017 07:51 AM

இன்னும் ஒரு கூவத்தூர் ஆரம்பமாகிவிடுமோ என்று பயமாக உள்ளது: தமிழிசை

Tamilisai-Soundararajan-about-Tamilnadu-politics

இன்று உள்ள தமிழக அரசியல் சூழலைப் பார்க்கும்போது இன்னும் ஒரு கூவத்தூர் ஆரம்பம் ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் செய்தியாளர்களிடையே பேசிய தமிழிசை, “அந்த அணியில் இவ்வளவு எம்.எல்.ஏ., இந்த அணியில் இவ்வளவு எம்.எல்.ஏ. என்று தினமும் செய்திகள் வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இன்னும் ஒரு கூவத்தூர் ஆரம்பமாகிவிடுமோ என்று பயமாக உள்ளது. கடந்த 6 மாதமாக ஒரு நிலையற்ற தன்மையே தமிழகத்தில் நிலவுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இருக்கின்ற எம்.எல்.ஏ.க்களை பிடித்து வைத்துக் கொள்ளவில்லை என்றால் தேவையில்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டிவரும். அது யாருக்குமே நல்லதல்ல. இந்த நிலையற்ற தன்மையைப் பார்க்கும்போது முதலில் உள்ளாட்சித் தேர்தல் வருமா? அல்லது சட்டமன்றத் தேர்தல் வருமா? என்று தெரியவில்லை. ஏதோ ஒரு தேர்தல் சந்திக்கப் போகிறோம் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது” என்று தமிழிசை கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்