சிறு வயதில் இருந்தே நடிகர் விஜயை பிடிக்கும் என்று நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
கன்னட திரைப்படம் மூலம் திரையுலகிற்கு வந்தவர் ராஷ்மிகா. இவர் தற்போது தெலுங்கில் பிஸியான நடிகையாக இருக்கிறார். கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார் ராஷ்மிகா. தமிழ்நாட்டிலும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆனால் இவர் இதுவரை நேரடி தமிழ் படத்தில் நடிக்கவில்லை.
மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தப்போதிலும் தேதிகள் இல்லாததால் மாஸ்டர் படம் கைநழுவியது. அதன்பின்னர் மாளவிகா மோகனன் ஒப்பந்தம் ஆனார். தற்போது தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா நடிகர் விஜய் குறித்து மனம் திறந்துள்ளார். தெலுங்கு பட விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் எந்த நடிகரை நண்பராக தேர்வு செய்வீர்கள்? எந்த நடிகரை காதலராக தேர்வு செய்வீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, நடிகர் நித்தினை நண்பராகவும், நடிகர் விஜயை காதலராகவும் தேர்வு செய்வேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய் குறித்து பேசிய அவர், சிறு வயதில் இருந்தே நடிகர் விஜயை பிடிக்கும் என்றும், அப்போதில் இருந்தே அவர் மீது ஒரு காதல் உண்டு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விஜயுடன் சேர்ந்து நடிக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் குழப்பம்: வெளிநாட்டு படப்பிடிப்புக்காக தவிக்கும் இந்தியன்2 படக்குழு!
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்