Published : 18,Feb 2020 03:49 AM

ஏற்றுமதியால் தட்டுப்பாடா?: தமிழகத்தில் இரு மடங்கு விலை உயர்ந்த முகக்கவசங்கள்!

Face-mask-rate-hike-in-tamilnadu
சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முகக்கவசங்களுக்கான தேவை அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முகக் கவசங்களின் விலை உயர்ந்துள்ளது.
 
முகக்கவசம், மருத்துவ பாதுகாப்பு உடைகள், கையுறை உள்ளிட்ட பலவற்றை ஏற்றுமதி செய்யக்கூடாதென கடந்த 1-ம் தேதி மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் சீனாவிற்கு நேரடியாக அல்லாமல் மலேசியா, இலங்கை,  தாய்லாந்து, சிங்கப்பூர், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் வழியாக முகக்கவசங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முகக் கவசங்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் சந்தையில் செயற்கை தட்டுப்பாடும் உருவாகியுள்ளது.
image
 
ஓரடுக்கு முகக்கவசம் வழக்கமாக 4 ரூபாய்க்கு விற்கப்படும். ஆனால் தற்போது 17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 6 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மூன்றடுக்கு முகக்கவசமோ தற்போது 25 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மறுபயன்பாடு செய்து கொள்ள ஏதுவான N95 முகக்கவசம் முன்னதாக 130 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது 220 ரூபாய் முதல் 270 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 
image
 
தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் முகக்கவசங்கள் குறித்த அச்சம் தேவையில்லை என்றாலும் இத்தகைய விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை தேவை என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மருத்துமனைகளைப் பொருத்தவரை முகக்கவசங்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்