’தீபிகாவுடன் எந்த ரோலிலும் நடிக்கத் தயார்’: பாலிவுட்டைக் குறிவைக்கும் வின்டீசல்

’தீபிகாவுடன் எந்த ரோலிலும் நடிக்கத் தயார்’: பாலிவுட்டைக் குறிவைக்கும் வின்டீசல்
’தீபிகாவுடன் எந்த ரோலிலும் நடிக்கத் தயார்’: பாலிவுட்டைக் குறிவைக்கும் வின்டீசல்

பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தால் தீபிகா படுகோனுடன் எந்த ரோலிலும் நடிக்கத் தயார் என்று ஹாலிவுட் நடிகர் வின் டீசல் தெரிவித்துள்ளார்.

வின் டீசலின் ட்ரிபிள் எக்ஸ்: ரிட்டர்ன் ஆஃப் சேண்டர்ஸ் கேஜ் என்ற திரைப்படம் மூலம் ஹாலிவுட்டில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கால் பதித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு முதன் முறையாக இந்தியா வந்த வின் டீசல், மும்பையில் நடந்த படத்தின் நிகழ்ச்சியில் தீபிகாவுடன் இணந்து லுங்கி டான்ஸ் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். இந்திய வருகை மற்றும் பாலிவுட் குறித்து பேசிய வின்டீசல், பாலிவுட் படங்கள் மக்களிடையே மாயாஜாலத்தை ஏற்படுத்தி வருகிறது என்றார். தீபிகா தொடங்கும் பாலிவுட் படத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பாலிவுட்டில் எதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த வின்டீசல், தீபிகா படுகோனுடன் எந்தவிதமான கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com