Published : 15,Feb 2020 11:46 AM

அஜித்தையும் ரஜினியையும் தங்கள் பக்கம் இழுக்கும் அதிமுக? - விஜயை தவிர்ப்பது ஏன்?

Is-AIADMK-trying-to-drag-actor-Ajith-into-politics

மீண்டும் அஜித்தை குறிவைத்து அரசியல் ஆட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “வருமானவரித்துறை ஒரு தனி அமைப்பாக செயல்படுகிறது. எங்கள் கட்சியில் இருப்பவர்கள் வீட்டில் கூடத்தான் சோதனை நடந்தது. அதற்கு என்ன சொல்ல? அதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை” எனச் சொன்னவரை மறித்து, ரஜினி அளவுக்கு விஜய் வளர்ந்து வருவதால்தான் அவரைக் குறிவைக்கிறார்கள் என்கிறார்களே என்று கேட்க, அதற்கு, “ரஜினிக்கு நிகரானவர் யாரும் இல்லை. ரஜினிக்கு நிகர் அஜித்தான். ரஜினி மலை; அஜித் தல” என சினிமா படப் பாணியில் ‘பஞ்ச்’ வசனம் பேசிவிட்டு நகர்ந்திருக்கிறார்.

image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே அஜித், அதிமுகவில் இணையப் போகிறார் என்றார்கள். ஆனால், அதற்கு அவர் வழக்கம் போல் தன் மெளனத்தால் பதில் சொன்னார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருப்பூரிலுள்ள அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்தனர். அதற்காக ஒரு விழா ஏற்பாடாகி இருந்தது. அப்போது, அந்த விழாவில் பேசிய தமிழிசை, “அஜித் மிகவும் நேர்மையானவர், நல்லவர். அவர் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால்தான் பாஜகவில் இணைந்துள்ளனர்” என்றார்.

அதுக்குள்ளேயே ‘ஹெச்டி பிரிண்ட்டா..?’ - ஷாக் ஆன 'வேர்ல்டு பேமஸ் லவ்வர்' படக்குழு

தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளை எதிர்த்து பாஜகவை வளர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் இருந்த தமிழிசை அவ்வாறு பேசிய அடுத்த நாளே, அஜித்தை மையமிட்டு பாஜக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அஜித்துடன் முடிச்சுப் போட்டு பலரும் அரசியல் யூகங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். ஆனால் அஜித், அதிரடியாக கருத்தை அவரது மேனஜர் மூலம் அறிக்கையாக வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர், “தனக்கு அரசியலுக்கு வர விரும்பவில்லை. நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை. சராசரியாக பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களிப்பதே அதிகபட்ச அரசியல் தொடர்பு. எனது திரைப்படத்தில் அரசியல் சாயம் வரக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளேன். கடமையை செவ்வன செய்வதையே ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறேன். என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே எனத் தெளிவாக புரிந்து வைத்திருப்பதே இதற்கு காரணம். என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் பூச வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்” எனக் கேட்டுக் கொண்டார்.

image

அஜித் குறித்து அதற்கு முன்னாள் வராத வதந்திகள் இல்லை. அப்போது எல்லாம் கூட அவர் மவுனத்தைத்தான் மறுமொழியாக தந்துள்ளார். ஆனால் இந்த முறை அவ்வாறு நடக்கவில்லை. பாஜகவுக்கு அவரது ரசிகர்கள் தலை சாய்க்கிறார்கள் என்றதும் அவர் உடனடியாக மவுனத்தை கலைத்து வெளியே வந்தார்.

image

இப்படி இதற்கு முன்னாள் அஜித், பல அதிரடிகளை காட்டி உள்ளார். ‘நொவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு நொடியையும் நானே பார்த்து பார்த்து செதுக்கினேன்’ எனக் கூறி வந்த அஜித்திற்கு அடித்தளமாக இருந்ததே அவரது ரசிகர்கள்தான். அந்த ரசிகர்ளுக்கு அவர் தனது 40 ஆவது பிறந்தநாளுக்கு தந்த பரிசு மிகவும் விநோதமானது. அன்றுதான் அவர் தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாக அறிவித்தார். அந்தச் சமயத்திலும் அவரது முகத்தை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயன்றபோது அதனை தடுக்கும் விதமாக இந்த அதிரடி முடிவை அறிவித்தார். அவர் ரசிகர் மன்றங்களை கலைத்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அவரது ரசிகர்கள் பலம் குறையவே இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு நடிகருக்கு இதற்குமுன் இதேபோல நடந்தது இல்லை.

'கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி’ : வெளியானது மாஸ்டர் படத்தின் ‘ஒருகுட்டிகதை’ பாடல்.

அதே போல அவர் அரசியல் மேடையிலேயே தனது கருத்தை நேர்மையாக வெளிப்படுத்திய தருணமும் உண்டு. 2010 ஆண்டு. ‘பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா; என முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட விழாவில், ‘ஐயா எங்களை பயமுறுத்தி அழைத்து வருகிறார்கள்’ என அவர் குரலை உயர்த்தி சொன்னபோது அரங்கேமே அதிர்ச்சியில் உறைந்தது. நடிகர் ரஜினிகாந்த் கூட உடனே எழுந்து நின்று கைத்தட்டி அதனை ஆமோதித்தார்.

image

தன்னைப் பற்றிய பல செய்திகளுக்கு எல்லாம் மவுனத்தை பதிலாக கடைப்பிடித்து வரும் அஜித், அரசியல் சார்ந்த வதந்திகளுக்கு மறுப்பு கொடுக்காமல் இருந்ததே இல்லை. சினிமா வட்டாரத்தில் அஜித் மற்றும் விஜய் என்பது இரு துருவங்கள். ஆகவே அதனை வைத்து சினிமா உலகம் பரபரப்பை பற்ற வைத்து வருகிறது. விஜய் நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்றாலும் அவருக்குள் அரசியல் ஆசை இல்லை என அவர் மறுத்ததே இல்லை.

image

25 ஆண்டுகளாக போராடி ரஜினியை அரசியலுக்கு ஏறக்குறைய அழைத்து வந்துவிட்டார்கள். அவருக்கு ஒரு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதனைத் தொடர்ந்து விஜய், ஆழம் பார்த்து வருகிறார் எனப் பலரும் பேசி வரும் வேளையில் அதிமுக, தங்களின் சக்தியை தக்க வைக்க அஜித்தை துணைக்கு அழைக்கும்படி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காய்நகர்த்த தொடங்கியுள்ளார். ஆனால், இந்த முறை அவர் அழைப்பது அஜித்தை. ஆகவே இப்போதைக்கு இவரதுக் கருத்து பல அதிர்வுகளை கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்