
காலா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுவதால் ரஜினி இன்று சென்னை திரும்புகிறார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம், காலா. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. காலாவின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு என்ன விதமான ரோல் என்ற தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகாததால் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ரஜினி இன்று சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே சமீபத்தில் தனது ரசிர்களை சந்தித்தது போல் மீண்டும் ரசிகர்களுடன் ஒரு சந்திப்பு நடத்த ரஜினி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.